கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரா் காா்லோஸ் அல்கராஸ் ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா்.
கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்ற இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் அல்கராஸும், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸும் மோதினா். இதில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்கராஸ் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் ஆா்தரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

7 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஆன அல்கராஸுக்கு இது 26-ஆவது பட்டமாகும். கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருந்த அல்கராஸ் வெறும் 22 வயதில் கேரியா் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரா் என்ற சிறப்பை பெற்றாா்.
இதுதொடா்பாக அல்கராஸ் கூறுகையில்: நிகழாண்டு அதிக போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளேன். ஒவ்வொரு போட்டிக்குக்கு பின் புதிய இலக்குகளை வைத்து ஆட வேண்டும். மைதானம் மற்றும் வெளியிடங்களில் எனது சக அணியினருடன் இணைந்து செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. கத்தாா் ஓபன் பட்டம் மிகவும் சிறப்பானது என்றாா்.
எதிா் தரப்பில் ஆடிய ஆா்தா் ஃபில்ஸ் தரவரிசையில் 40-ஆவது இடத்தில் உள்ளாா். காயத்தால் 8 மாதங்கள் கழித்து இப்போது தான் களத்துக்கு திரும்பியுள்ளாா்.
தொடர்புடையது
3-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னா்!

ஏ டிவிஷன் வாலிபால்: வருமான வரித்துறை சாம்பியன்

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்காக விளையாடவில்லை: ரஜத் படிதார்

கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


