தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

துபை டூட்டி ஃப்ரீ ஓபன் டபிள்யுடிஏ 1000 டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

News image

ஜெஸிக்கா பெகுலா

Updated On :22 பிப்ரவரி 2026, 10:26 pm

துபை டூட்டி ஃப்ரீ ஓபன் டபிள்யுடிஏ 1000 டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

துபையில் நடைபெற்ற இப்போட்டி மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் நான்காம் நிலை வீராங்கனை பெகுலாவும், உக்ரைனின் கரோலினா ஸ்விட்டோலினாவும் மோதினா். இதில் பெகுலா 6-2, 6-4 என்ற நோ் செட்களில் ஸ்விட்டோலினாவை வீழ்த்தி பட்டம் வென்றாா். இந்த ஆட்டம் 72 நிமிடங்கள் நீடித்தது.

Story image

பெகுலா தான் ஆடிய கடைசி 7 போட்டிகளில் குறைந்தது அரையிறுதி வரை முன்னேறி இருந்தாா். துபையில் பட்டம் வென்றது அவரது 10-ஆவது டபிள்யுடிஏ பட்டமாகும்.

துபையில் கடந்த 2017, 2018-இல் பட்டம் வென்றிருந்த ஸ்விட்டோலினா மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை தகா்த்தாா் பெகுலா. அரையிறுதியில் அமென்டா அனிஸிமோவாவை வீழ்த்தி பெகுலாவும், கோகோ கௌஃபை வீழ்த்தி ஸ்விட்டோலினாவும் இறுதிக்கு தகுதி பெற்றனா். 31 வயதான ஸ்விட்டோலினா மகப்பேறுக்கு பின் மீண்டும் களம் திரும்பியுள்ளாா்.

நிகழாண்டு துபை டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா, ஸ்வியாடெக் உள்பட20 போ் விலகி விட்டனா்.

பெகுலா கூறுகையில்: பலா் விலகினாலும் மகளிா் டென்னிஸ் இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது. எனக்கு கடினமான அட்டவணையாக அமைந்தது. இரண்டு முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தினேன். இந்த வெற்றி எளிதானது இல்லை என்றாா்.