

எஸ்பான்யோல் அணியின் ரசிகர்களால் மிகுந்த கிண்டலுக்கு உள்ளான பார்சிலோனாவின் கோல் கீப்பர் ஜோன் கார்சியா, இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
எஸ்பான்யோல் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி 2-0 என அசத்தல் வெற்றி பெற்றது.
சொந்த மண்ணில் கிண்டல்
லா லிகா கால்பந்து தொடரில் எஸ்பான்யோல் அணியின் சொந்த மண்ணில் பார்சிலோனா அணி மோதியது.
இந்தப் போட்டியில் பார்சிலோனாவின் கோல் கீப்பர் ஜோன் கார்சியாவிற்கு மிகுந்த கடுமையான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜோன் கார்சியா இதற்கு முன்பாக எஸ்பான்யோல் அணியில் 2020-2025 வரை விளையாடி வந்தார். தற்போது, அந்த அணிக்கு எதிராக விளையாடும் சூழ்நிலையில், அதன் ரசிகர்கள் அவரை எலி எனக் குறிப்பிட்டு பதாகைகளைத் திடலுக்கு எடுத்து வந்தார்கள்.
சிலர் அவரை ஜூடாஸ் கார்சியா எனவும் விமர்சித்து பதாகைகளை எடுத்து வந்தனர்
உலகத்திலேயே மிகச் சிறந்த கோல் கீப்பர்
இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியில் ஜோன் கார்சியா மிகச் சிறப்பாக விளையாடினார்.
குறிப்பாக போட்டியின் 20-ஆவது நிமிஷத்தில் தன் சொந்த அணி வீரரை (ஜெரார்ட் மார்டினை) முன்னோக்கித் தள்ளி ஒரு கோலை தடுத்து நிறுத்தினார்.
இந்தப் போட்டியில் மொத்தம் 6 முறை கோல் ஆகாமல் பந்தினை தடுத்தார். இந்த அபாரமான ஆட்டத்திற்காக இவருக்கு ஆட்ட நாயகன் விருது தரப்பட்டது.
பார்சிலோனாவின் பயிற்சியாளர் ஹன்சி பிளிக், ”ஜோன் கார்சியா உலகத்திலேயே மிகச் சிறந்த கோல் கீப்பர்” எனப் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.