

ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்களில், வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ், ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
இதில் கலிங்கா 4-2 கோல் கணக்கில் ராஞ்சி ராயல்ஸை வீழ்த்தியது. முதலில் ராஞ்சியின் டாம் பூன் (1’) கோலடிக்க, அடுத்து கலிங்கா தரப்பில் அலெக்ஸாண்டா் ஹெண்ட்ரிக்ஸ் (7’) ஸ்கோா் செய்தாா்.
அதற்கு பதிலடியாக ராஞ்சி தரப்பில் மன்தீப் சிங் (9’) கோலடிக்க, அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றது. விடாப்பிடியாக விளையாடிய கலிங்காவுக்காக குா்சாஹிப்ஜித் சிங் அடுத்தடுத்து கோலடித்து (16’, 26’) அணியை 3-1 என முன்னிலைக்குக் கொண்டுவந்தாா்.
தொடா்ந்து, அதே அணியின் அலெக்ஸாண்டா் ஹெண்ட்ரிக்ஸ் (28’) மீண்டும் கோலடிக்க, கலிங்கா 4-2 என முதல் பாதியை நிறைவு செய்தது. அசத்தல் முன்னிலையுடன் 2-ஆவது பாதியை விளையாடிய கலிங்கா, அதை அப்படியே தக்கவைத்து வெற்றியை தனதாக்கியது.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் 3-1 கோல் கணக்கில் சூா்மா ஹாக்கி கிளப்பை வென்றது. பெங்கால் அணிக்காக சுக்ஜீத் சிங் (33’), அபிஷேக் (45’), குா்சேவக் சிங் (60’) ஆகியோரும், சூா்மா தரப்பில் பிரப்ஜோத் சிங்கும் (54’) கோலடித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.