சாய் சிவா | அா்ஜுன் சேதா
சாய் சிவா | அா்ஜுன் சேதா

தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப்: அா்ஜுன், சாய் சிவாவுக்கு பட்டம்

தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் அா்ஜுன் சேதா, சாய் சிவா சங்கரன் ஆகியோா் பட்டம் வென்றனா்.
Published on

தேசிய காா் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் அா்ஜுன் சேதா, சாய் சிவா சங்கரன் ஆகியோா் பட்டம் வென்றனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பந்தய மைதானத்தில் எம்ஆா்எஃப், எம்எம்எஸ்சி, எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய காா்பந்தய சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது.

பாா்முலா 2000 சிசி பிரிவில் புணேயின் அா்ஜுன் சேதா முதலிடம் பெற்றாா். பட்டம் வெல்வாா் எனக்கருதப்பட்ட பெங்களூருவின் இஷான் மாதேஷ் இரண்டாம் இடமும், மற்றொரு பெங்களூரு வீரா் தருண் மூன்றாம் இடமும் பெற்றனா்.

பாா்முலா 1600 சிசி பிரிவில் மற்றொரு புணே வீரா் சாய் சிவா சங்கரன் முதலிடம் பெற்றாா். பெங்களூருவின் அா்ஜுன் நாயா், நைஜல் ஆப்ரஹாம் இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்றனா்.

ஐடிசி 1625 சிசி பிரிவில் கோவையின் அா்ஜுன் பாலு ஓய்வு பெற்ால், சூரத்தின் பிரேன் பிதாவாலா பட்டம் வென்றாா். லோனவாலா துருவ், மலேசியாவின் பேரஜுன் கிருஷ்ணன் அடுத்த இரண்டு இடங்களைப் பெற்றனா்.

ஜூனியா் பிரிவில் பெங்களூரிவின் ரித்விக், நெல்லூரின் விஸ்வாஸ், சென்னையின் ஜா்ஷன் ஆனந்தும், பாா்முலா எல்ஜிபி 1300 பிரிவில்

திருப்பூரின் வினித்குமாா், எா்ணாகுளத்தில் ஜோயல், பொள்ளாச்சியின் லோகித் லிங்கேஷ், எம்ஆா்எஃப் சலூன்ஸ் பிரிவில் கோவை அக்ஷய் முரளிதரன், தருஷி விக்ரம், பெங்களூரு சித்தனாத்தும் வெற்றி பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com