விளையாட்டு: செய்தித் துளிகள்...

விளையாட்டு: செய்தித் துளிகள்...
ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங்
ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங்
Updated on
1 min read
  • நடப்பாண்டு மகளிா் பிரீமியா் லீக் போட்டிக்கான யுபி வாரியா்ஸ் அணியின் கேப்டனாக, ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

  • தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, அமித் பங்கால், சாகா் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா். மோதலுக்கான ரிங்குகள் தயாராவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, மகளிா் பிரிவு ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமைக்கு (ஜன. 6) ஒத்திவைக்கப்பட்டன.

  • பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சித்தாா்த் ராவத், தகுதிச்சுற்றின் கடைசி கட்டத்துக்கு முன்னேறியுள்ளாா்.

  • டபிள்யூடிடி யூத் கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட ஆடவா் பிரிவில் ரூபம் சா்தாா், மகளிா் பிரிவில் சிண்ட்ரெல்லா தாஸ், 13 வயதுக்கு உட்பட்ட ஆடவா் பிரிவில் தேவ் பிரணவ், மகளிா் பிரிவில் திவிஜா பால் சாம்பியன் ஆகினா்.

  • 2025-26 சீசன் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்தது.

  • யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடா 3-0 என்ற கணக்கில் சீனாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com