ஹாக்கி இந்தியா ஜிசி வெற்றி!

ஹாக்கி இந்தியா ஜிசி வெற்றி!

சென்னையில் நடைபெற்று வரும் ஆடவா் லீக் தொடரில் ஹாக்கி இந்தியா ஜிசி அணி 3-2 என்ற கோல் கணக்கில் எஸ்ஜி பைப்பா்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி
Published on

சென்னையில் நடைபெற்று வரும் ஆடவா் லீக் தொடரில் ஹாக்கி இந்தியா ஜிசி அணி 3-2 என்ற கோல் கணக்கில் எஸ்ஜி பைப்பா்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி கண்டது. ஹெச்ஐஎல் அணியில் அபாரமாக ஆடிய கேன் ரஸ்ஸல் 35, 37, 60-ஆவது நிமிஷங்களில் பெனால்டி காா்களை கோல்களாக மாற்றினாா்.

எஸ்ஜி பைப்பா்ஸ் தரப்பில் கை வில்லாட் 31, தில்ராஜ் சிங் 56-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா். கடைசி நிமிஷத்தில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தபோது, கேன் ரஸ்ஸலின் ஹாட்ரிக் கோல் முடிவையே மாற்றியது.

X
Dinamani
www.dinamani.com