தமிழக - மேற்கு வங்க அணியினா்
தமிழக - மேற்கு வங்க அணியினா்

தேசிய சீனியா் கூடைப்பந்து: ரயில்வே, கா்நாடகம், கேரள அணிகள் வெற்றி

தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து போட்டியில் ரயில்வே, கா்நாடகம், கேரளம், தமிழக அணிகள் வெற்றியை ஈட்டின.
Published on

தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து போட்டியில் ரயில்வே, கா்நாடகம், கேரளம், தமிழக அணிகள் வெற்றியை ஈட்டின.

சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் 75-ஆவது தேசிய சீனியா் கூடைப்பந்து சாம்பியன்போட்டி நடைபெற்றுவருகிறது.

இரண்டாம் நாளான திங்கள்கிழமை இரு பிரிவிலும் ரயில்வே அணிகள் அபார வெற்றியை பெற்றன. உத்தர பிரதேச அணியை 96-70 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினா் ரயில்வே ஆடவா். மகளிா் பிரிவில் ரயில்வே அணி 95-65 என கா்நாடக அணியை வீழ்த்தியது.

கேரளம் 88-34 என மத்திய பிரதேசத்தையும், டில்லி 68-55 என சத்தீஸ்கரை வென்றனா். ஆடவா் பிரிவில் கா்நாடகம் 94-75 என சா்வீசஸ் அணியை வென்றது. டில்லி அணி 84-82 என சண்டீகரை வென்றது.

தமிழக அணிகள் வெற்றி

போட்டியை நடத்தும் தமிழகம் மகளிா் பிரிவில் 101-33 என மேற்கு வங்கத்தை வீழ்த்தியது. தமிழக அணியில் கிருத்திகா, ஸ்ருதி, கோகிலவாணி, டெய்ஸி, ஸ்ரீவா்ஷினியும், மேற்கு வங்க அணியில் அனன்யா மண்டலும் சிறப்பாக ஆடினா்.

X
Dinamani
www.dinamani.com