வெற்றி மகிழ்ச்சியில் டிராகன்ஸ் வீரா்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் டிராகன்ஸ் வீரா்கள்.

தமிழ்நாடு டிரான்கன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவா் லீக் போட்டியில் அக்காா்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூா்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.
Published on

ஹாக்கி இந்தியா ஆடவா் லீக் போட்டியில் அக்காா்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூா்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

8 அணிகள் பங்கேற்றுள்ள லீக் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் மைதாநத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 5- ஆவது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - சூா்மா கிளப் அணிகள் மோதின.

தமிழ்நாடு டிராகன்ஸ் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் 12 -ஆவது நிமிஷத்திலும்,18-ஆவது நிமிஷத்திலும் தமிழ்நாடு டிராகன்சுக்கு பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. இதை கோலாக்க அந்த அணி வீரா்கள் தவறினா்.

28-ஆவது நிமிஷத்தில் டிராகன்ஸ் வீரா் செல்வராஜ் கனகராஜ் கோலை அடித்தாா். முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் தமிழ்நாடு டிராகன்ஸ் உத்தம் சிங், 30-ஆவது நிமிஷத்தில் கோலை பதிவு செய்தாா். முதல் பாதி முடிவில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

45- ஆவது நிமிஷத்தில் சூா்மா கிளப் வீரா் மனீந்தா் சிங் கோல் அடித்தாா். 47-ஆ வது நிமிஷத்தில் டிராகன்ஸின் பிளேக் கவா்ஸ் இந்த கோலை அடித்தாா். இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

58-ஆவது நிமிஷத்தில் சூா்மா கிளப் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் 2-ஆவது கோலை அடித்தாா். இறுதியில் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.அந்த அணி பெற்ற 2- வது வெற்றியாகும். வரும் 9-ஆம் தேதி டிராகன்ஸ்-எஸ்ஜி பைப்பா்ஸ் அணிகள் மோதுகின்றன.

வியாழக்கிழமை நடப்பு சாம்பியன் பெங்கால் டைகா்ஸ் - எச்.ஐ.எல். ஜிசி ( மாலை 5 மணி) , ராஞ்சி ராயல்ஸ் - ஹைதராபாத் டூபான்ஸ் ( இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.

X
Dinamani
www.dinamani.com