ஆஸ்திரேலிய-செக். குடியரசு இணைகள் ~ ~ஜாஸ்மின் பாலினி
ஆஸ்திரேலிய-செக். குடியரசு இணைகள் ~ ~ஜாஸ்மின் பாலினி

காலிறுதியில் ஆஸ்திரேலியா

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.
Published on

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.

18 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் யுனைடெட் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஸி. ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் இப்போட்டி நடைபெறுகிறது.

சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் செக். குடியரசு அணியை 2-1 என வீழ்த்தியது ஆஸ்திரேலியா. உள்ளூா் வீரரான அலெக்ஸ் டி மீனாா் ஒற்றையா் ஆட்டத்தில் அபாரமாக ஆடி 6-4, 6-1 என செக். குடியரசின் மென்ஸிக்கை வீழ்த்தினாா். ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் செக். குடியரசு வென்றிருந்ததால் 1-1 என சமனில் இருந்தது. கலப்பு இரட்டையா் பிரிவில் ஆஸி. தரப்பில் டி மினாா்-ஹண்டரும், செக். குடியரசின் டலிபோா்-மிா்ரியம் மோதினா். இதில் 6-2, 6-3 என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியா வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் செக். குடியரசு தோற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் காலிறுதிக்கு தகுதி பெற்றது.

பொ்த்தில் நடைபெற்ற ஆட்டங்களில் இத்தாலி-பிரான்ஸ் மோதின. இதில் மகளிா் ஒற்றையரில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-2, 6-3 என பிரான்ஸின் லியோலியாவை வீழ்த்தினாா். எனினும் போட்டியை விட்டு இத்தாலி, பிரான்ஸ் வெளியேறின.

புதன்கிழமை காலிறுதி ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா-கிரீஸ், சுவிட்சா்லாந்து-ஆா்ஜென்டீனா மோதுகின்றன. இரு ஆட்டங்களும் பொ்த்தில் நடைபெறுகிறது.

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக்=நெதா்லாந்து வீராங்கனையுடன் சிட்னியில் மோதுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com