

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா 5-0 என அபார வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அல்லது அத்லெடிகோ மாட்ரிட் உடன் பார்சிலோனா மோதவிருக்கிறது.
சௌதி அரேபியாவில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியும் அத்லெடிகோ பில்போ அணியும் மோதின.
இந்தப் போட்டியில் ஃபெர்ரன் டோரஸ் (22’), ஃபெர்மின் லோப்ஸ் (30’), ரூனி (34’), ரபீனியா (38’, 52’) ஆகியோர் கோல் அடித்தார்கள்.
அத்லெடிகோ பில்போ அணி கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அதனால், பார்சிலோனா 5-0 என அபார வெற்றி பெற்றது.
கடந்த ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி ரியல் மாட்ரிட்டை 5- 2 என வீழ்த்தியது.
இந்தமுறையும் இரு அணிகள் மோதிக்கொள்ளுமா என கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.