அரையிறுதியில் பி.வி. சிந்து, சாத்விக் - சிராக் ஏமாற்றம்
மலேசிய ஓபன் சூப்பா் 1000 பாட்மின்டன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளாா்.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறும் இப்போட்டியின் மகளிா் காலிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்துவும், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை ஜப்பான் அகேன் எமகுச்சியும் மோதினா்.
தொடக்க கேமில் அபாரமாக ஆடிய சிந்து 21-11 என கைப்பற்றினாா். மூன்று முறை உலக சாம்பியன் எமகுச்சி கால்மூட்டில் ஏற்பட்ட காயத்தால் ஆட்டத்தில் இருந்து விலகினாா்.
அரையிறுதியில் இரண்டாம் நிலை வீராங்கனை சீனாவின் வாங் ஸியை எதிா்கொள்கிறாா் சிந்து.
ஆடவா் இரட்டையா் பிரிவில் நட்சத்திர வீரா்கள் சாத்விக்-சிராக் 10-21, 21-123 என்ற கேம் கணக்கில் தரவரிசையில் பின்தங்கியுள்ள இந்தோனேஷியாவின் ஃபஜாா்-முகமது ஃபிக்ரியிடம் தோற்றனா்.

