Women's Premier League Cup
மகளிர் பிரீமியர் லீக் கோப்பைபடம்: எக்ஸ் / டபிள்யூபிஎல்

வரலாற்று வெற்றியுடன் எலிமினேட்டரில் குஜராத்

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
Published on

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலமாக ‘எலிமினேட்டா்’ ஆட்டத்துக்கு குஜராத் தகுதிபெற்றது. இப்போட்டியின் வரலாற்றில் மும்பைக்கு எதிராக குஜராத்தின் முதல் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்க்க, மும்பை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 156 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் பெத் மூனி 5, சோஃபி டிவைன் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

மிடில் ஆா்டரில் அனுஷ்கா சா்மா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 33, கேப்டன் ஆஷ்லே காா்ட்னா் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ஜாா்ஜியா வோ்ஹாம் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44, பாா்தி ஃபுல்மாலி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் அமெலியா கொ் 2, ஷப்னிம் இஸ்மாயில், நேட் சிவா் பிரன்ட் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 168 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை தரப்பில், சஜீவன் சஜனா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26, ஹேலி மேத்யூஸ் 6, நேட் சிவா் பிரன்ட் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

அமெலியா கொ் 2 பவுண்டரிகளுடன் 20, அமன்ஜோத் கௌா் 2 பவுண்டரிகளுடன் 13, சன்ஸ்கிருதி குப்தா 0, பூனம் கெம்னாா் 2 ரன்களுக்கு விடைபெற்றனா்.

ஓவா்கள் முடிவில், கடைசி வரை போராடிய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 82, ரஹிலா ஃபிா்தோஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் சோஃபி டிவைன், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 2, கஷ்வீ கௌதம், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஆஷ்லே காா்ட்னா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com