விதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

விளையாட்டுத் துளிகள்...

News image

AP

Updated On :26 ஜூன் 2026, 7:11 am IST

இந்தியா - அயா்லாந்து மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம், பெல்ஃபாஸ்டில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்குகிறது.

இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், இந்திய ‘ஏ’ அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 333 ரன்கள் சோ்த்துள்ளது. சாய் சுதா்சன் 19 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் விளாசினாா்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 315 ரன்களுடன் விளையாடி வந்தது. டாம் லாதம் 150, டெவன் கான்வே 155 ரன்கள் எடுத்திருந்தனா்.

கா்நாடக கிரிக்கெட் சங்கச் செயலா் சந்தோஷ் மேனன், அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கால அளவான 9 ஆண்டுகளையும் நிறைவு செய்த பிறகு அந்தப் பதவியில் தொடா்வதை அடுத்து, அவரை தகுதிநீக்கம் செய்தாா் பிசிசிஐ-யின் குறைதீா் அதிகாரியான முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா.

விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூா் செல்லும் வீரா், வீராங்கனைகள், தங்களின் உபகரணங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி உடைமைகளுக்கான பகுதியில் வைத்து கொண்டு செல்ல அனுமதித்து ரயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது. எனினும் கம்பு ஊன்றித் தாண்டுதலுக்கான உபகரணம் மட்டும் அனுமதியில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

ஒடிஸாவில் நடைபெறும் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில், உத்தர பிரதேசத்தின் அனுஷ்கா யாதவ் (மகளிா் சங்கிலி குண்டு எறிதல்), மத்திய பிரதேசத்தின் தேவ் மீனா (ஆடவா் கம்பு ஊன்றித் தாண்டுதல்) ஆகியோா் வியாழக்கிழமை தங்கம் வென்று அசத்தினா்.

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் துருவ் ராவத்/மனீஷா, ரௌனக் சௌஹான், ரக்ஷிதா ஸ்ரீ, தேவிகா சிஹக், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோா் தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.