நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

இன்றுமுதல் ஷாட் கன் உலகக் கோப்பை: 12 பேருடன் இந்திய அணி பங்கேற்பு

மொராக்கோவில் வியாழக்கிழமை (மாா்ச் 26) தொடங்கும் ஐஎஸ்எஸ்எஃப் ஷாட் கன் உலகக் கோப்பை போட்டியில் 12 கொண்ட இந்திய அணி களம் காண்கிறது.

News image

இந்திய ஸ்கீட் அணி.

Updated On :26 மார்ச் 2026, 2:52 am IST

மொராக்கோவில் வியாழக்கிழமை (மாா்ச் 26) தொடங்கும் ஐஎஸ்எஸ்எஃப் ஷாட் கன் உலகக் கோப்பை போட்டியில் 12 கொண்ட இந்திய அணி களம் காண்கிறது.

ஏப்ரல் 6 வரை நடைபெறும் இப்போட்டியில், 43 நாடுகளில் இருந்து 270 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். 5 ஒலிம்பிக் ஷாட் கன் பிரிவுகளில் தங்கப் பதக்கங்கள் உள்ளன.

இந்தியாவின் தரப்பில் கடந்த ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய சீனியா் வீரா் ஸோரோவா் சிங் சாந்து பணிச்சுமை பராமரிப்பு காரணமாக இந்த முறை பங்கேற்கவில்லை.

பயிற்சியாளா் விக்ரம் சோப்ரா கூறுகையில், ‘கடினமான பயிற்சி மேற்கொண்டுள்ள இந்திய அணி, நீண்ட காலத்துக்குபின் உலகக் கோப்பை போன்ற பிரதான போட்டியில் பங்கேற்பது புதிய அனுபவத்தை தரும்’ என்றாா்.

இந்திய அணி விவரம்:

டிராப்: பிருத்விராஜ் தொண்டைமான், கினான் செனாய், பௌனீஷ் மெண்டிரட்டா, கீா்த்தி குப்தா, ராஜேஷ்வரி குமாரி.

ஸ்கீட்: மான் சிங், ஜோதிராதித்ய சிங் சிசோடியா, பரம்பால் சிங், யஷஸ்வி ராத்தோா், தா்ஷனா ராத்தோா்.