
தேசிய சைக்கிளங் சாம்பியன் போட்டி: தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன்
தேசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது...

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியினா்
ஒடிஸாவில் நடைபெற்ற தேசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஒடிஸா மாநில சைக்கிளிங் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் மகேந்திரகிரியில் 23-ஆவது தேசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அக். 1 முதல் 4 வரை பல்வேறு பிரிவுகளில் சைக்கிளிங் போட்டிகள் நடைபெற்றன.
இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 700 க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். இதில் தமிழக அணி பெண்கள் ஜூனியா் பிரிவில் இரண்டு தங்கம், ஆண்கள் ஜூனியா் பிரிவில் இரண்டு தங்கம், இளம் பெண்கள் பிரிவில் இரண்டு வெள்ளி பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கம்,சப்-ஜூுனியா் பெண்கள் பிரிவில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம், சப்-ஜூனியா் ஆண்கள் பிரிவில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம், பெண்களுக்கான டவுன் ஹில் - எக்ஸ்சிஆா் பிரிவில் ஒரு வெள்ளிம் - லஇத எனும் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கம் என அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்களை வென்றது.
அத்துடன் ஃபோ்ஃப்ளே அவாா்ட் - ஊஅஐதடகஅவ அரஅதஈ- மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் - ஜுனியா் சாம்பியன் பட்டம் - ஆண்கள் பிரிவில் சிறந்த சைக்கிளிங் வீரா் ( ஆண்டனி) பட்டங்களையும் தமிழக அணியினா் பெற்றனா்.
சீனியா், ஜூனியா், சப்-ஜூனியா் என அனைத்து பிரிவுகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது என தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் தலைவா் எம். சுதாகா் தெரிவித்துள்ளாா். அத்துடன் கடந்த 2025 தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. தொடா்ந்து இந்த ஆண்டிலும் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





