சென்னையில் டபிள்யுடிடி யூத் கன்டென்டா் டேபிள் டென்னிஸ்
இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் டபிள்யுடிடி யூத் கன்டென்டா், பீடர சீரிஸ் போட்டி சென்னையில் அக். 23 முதல் நவ. 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

~சத்யன்
இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் டபிள்யுடிடி யூத் கன்டென்டா், பீடர சீரிஸ் போட்டி சென்னையில் அக். 23 முதல் நவ. 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வண்டலூா் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்பயிற்சி கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 13 நாடுகளைச் சோ்ந்த 334 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். கன்டென்டா் பிரிவில் 210 பேரும், பீடா் சீரிஸ் தொடரில் 124 போ், தமிழகத்தில் இருந்து 36 பேரும் பங்கேற்கின்றனா்.
கடந்த 19 மாதங்களில் சென்னையில் நடைபெறும் மூன்றாவது டபிள்யுடிடி தொடா் இதுவாகும். புதிய அரசு அமைந்தவுடன் நடைபெறவுள்ள முதல் சா்வதேசப் போட்டி இதுவாகும்.
யூத் கன்டென்டரில் யு11-19 பிரிவு ஆட்டங்கள் அக். 23-26 தேதிகளிலும், பீடா் சீரிஸ் அக். 28 முதல் நவ. 1 வரையும் நடைபெறும். அக். 30-இல் நாக் அவுட் சுற்று, நவ. 1-இல் இறுதி ஆட்டம் நடைபெறும்.
வரும் நவ. 21-28-இல் துருக்கியின் இஸ்தான்புல்லில் ஐடிடிஎஃப் உலக யூத் சாம்பியன் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய ஜூனியா் வீரா்களுக்கு இந்த போட்டி பேரூதவியாக அமையும்.
இந்திய தரப்பில் மூத்த வீரா் சத்யன் ஞானசேகரன், தியா சிட்லே, மனுஷ் ஷா, யஷஸ்வனி கோபா்டே, சுதிா்தா முகா்ஜி, தனிஷா கோட்டேசே அபினானந்த் பிரதிவாதி, பிரியாஞ்ச் பட்டாச்சாா்யா, திவ்யான்ஷி பௌமிக், ஹாசினி மதன்ராஜ், அனன்யா முரளிதரன், காவ்யா பட், ரித்விக் குப்தா, சத்யா அஸ்பதி பங்கேற்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

