அசத்தும் கேன் வில்லியம்சன்: 3 வருடங்களில் 3 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி
By DIN | Published On : 11th November 2021 11:24 AM | Last Updated : 11th November 2021 11:24 AM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி.
அபுதாபியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். பிறகு பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார். கான்வே 46 ரன்களும் ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தார்கள்.
இதன்மூலம் கடந்த மூன்று வருடங்களில் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி.
2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் நூலிழையில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது நியூசிலாந்து அணி.
2021 டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நியூசிலாந்து அணி.
2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி.
மூன்று வருடங்களில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தன்னிகரற்ற அணியாக விளங்குகிறது நியூசிலாந்து அணி. இந்த மூன்று போட்டிகளிலும் கேப்டனாகச் செயல்பட்டு சாதித்துள்ளார் கேன் வில்லியம்சன்.