டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர்கள்!

ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷும் தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் வென்றார்கள். 
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர்கள்!

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010-இல் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது.

நியூஸிலாந்து இன்னிங்ஸில் பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசி அணியின் ஸ்கோரை அட்டகாசமாக உயா்த்தினாா் கேப்டன் வில்லியம்சன். 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார். ஆஸி. அணியின் ஹேசில்வுட் அற்புதமாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் மிட்செல் மார்ஷ் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷும் தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் வென்றார்கள். 

டி20 உலகக் கோப்பை: ஆட்ட நாயகன்

2007 - இர்பான் பதான்
2009 - சாஹித் அப்ரிடி
2010 - கிரைக் கீஸ்வெட்டர்
2012 - மர்லான் சாமுவேல்ஸ்
2014 - குமார் சங்கக்காரா
2016 -  மர்லான் சாமுவேல்ஸ்
2021 - மிட்செல் மார்ஷ்

டி20 உலகக் கோப்பை: தொடர் நாயகன்

2007 - சாஹித் அப்ரிடி
2009 - தில்ஷன்
2010 - கெவின் பீட்டர்சன்
2012 - ஷேன் வாட்சன்
2014 - விராட் கோலி
2016 - விராட் கோலி
2021 - டேவிட் வார்னர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com