சவாலை வெல்லுமா தெ.ஆ. அணி?: 143 ரன்கள் எடுத்த மே.இ. தீவுகள்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.
சவாலை வெல்லுமா தெ.ஆ. அணி?: 143 ரன்கள் எடுத்த மே.இ. தீவுகள்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மே.இ. தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளன. பலமான அணிகள் கொண்ட குரூப் 1 பிரிவில் இரு தோல்விகளை அடைந்தால் அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்பதால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் சவாலானதாக அமையும்.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. சொந்தக் காரணங்களுக்காக இந்த ஆட்டத்திலிருந்து பிரபல வீரர் டி காக் விலகியுள்ளதாக தெ.ஆ. அணி கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார். ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். மே.இ. தீவுகள் அணியில் ஒபட் மெகாய்க்குப் பதிலாக ஹேடன் வால்ஷ் இடம்பெற்றுள்ளார். மிகமுக்கியமான ஆட்டத்தில் டி காக் விலகியுள்ளதால் தெ.ஆ. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து இந்த ஆட்டத்தில் டி காக் விலகியதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஒரேவிதமாக அனைத்து வீரர்களும் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியிருந்தது.

முதல் 3 ஓவர்களில் 6 ரன்கள் மட்டும் எடுத்தார்கள் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸும் எவின் லூயிஸும். இதன்பிறகு லூயிஸ் அதிரடியாக விளையாடினார். இதனால் 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் கிடைத்தன. 10 ஓவர்களின் முடிவில் 65 ரன்கள் கிடைத்தன. 35 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து லூயிஸ் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 12 ரன்களிலும் நிதானமாக விளையாடிய லெண்டில் சிம்மன்ஸ்  35 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். சிம்மன்ஸால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் போனது. டி20 உலகக் கோப்பையில் 35 பந்துகளை எதிர்கொண்டும் ஒரு பவுண்டரியும் அடிக்காத 2-வது வீரர் ஆனார். மே.இ. தீவுகள் அணி 15 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது.

கெயில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 19-வது ஓவரில் ரஸ்ஸல் 5 ரன்களிலும் ஹெட்மையர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். கடைசி ஓவரில் பொலார்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்ததால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனது. பொலார்ட் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்தார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com