டி20 உலகக் கோப்பை: பிரபல வீரர் விலகலால் நியூசிலாந்துக்குப் பின்னடைவு

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல வீரர் ஃபெர்குசன் விலகியுள்ளதால் நியூசிலாந்து அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை: பிரபல வீரர் விலகலால் நியூசிலாந்துக்குப் பின்னடைவு

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல வீரர் ஃபெர்குசன் விலகியுள்ளதால் நியூசிலாந்து அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான். ஷாா்ஜாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் அடிக்க, பின்னா் பாகிஸ்தான் 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வென்றது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டம் தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்பு பிரபல நியூசிலாந்து வீரர் லாகி ஃபெர்குசன், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து நியூசி. அணியில் ஆடம் மில்ன் சேர்க்கப்பட்டுள்ளார். கெண்டைக்கால் பின்தசையில் ஏற்பட்ட காயம் குணமாக மூன்று முதல் நான்கு வாரம் ஆகும் என்பதால் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஃபெர்குசன் விலகியுள்ளார். நியூசிலாந்து அணி 13 நாள்களில் 5 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலைமையில் உள்ளதால் வேறுவழியின்றி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2021 போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஃபெர்குசன் 8 ஆட்டங்களில் பங்கேற்றார். ஃபெர்குசன் சிறப்பாகப் பந்துவீசியதால் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று இறுதிச்சுற்று வரை கொல்கத்தா அணி முன்னேறியது. கடந்த ஒரு மாத காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஃபெர்குசன் விளையாடி வருவதால் அவருடைய இந்த அனுபவம் நியூசிலாந்து அணிக்குப் பெரிதும் உதவும் எனக் கூறப்பட்ட நிலையில் காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோற்றுள்ள நியூசிலாந்து அணி ஞாயிறன்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் தோற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும். இந்த நிலையில் ஃபெர்குசனின் விலகல் நியூசி. அணிக்குப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com