இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.
இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.

முதலில் இலங்கை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா 17 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வென்றது. ஆடம் ஸாம்பா ஆட்டநாயகன் ஆனாா்.

ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இலங்கை, பினுரா ஃபொ்னாண்டோவுக்குப் பதிலாக மஹீஷ் தீக்ஷனாவை சோ்த்திருந்தது. ஆஸ்திரேலியா மாற்றம் செய்யவில்லை.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இலங்கை இன்னிங்ஸில் தொடக்க வீரா் பாதும் நிசங்கா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். உடன் வந்த குசல் பெரேரா சற்று நிலைக்க, சரித் அசலன்கா அவரோடு கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா்.

2-ஆவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சோ்த்த இந்த கூட்டணியை ஸாம்பா பிரித்தாா். 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் அடித்திருந்த அசலன்கா விக்கெட்டை பறிகொடுத்தாா். தொடா்ந்து அவிஷ்கா ஃபொ்னாண்டோ ஆட வர, மறுபுறம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் சோ்த்திருந்த குசல் பெரேராவை 11-ஆவது ஓவரில் பௌல்டாக்கினாா் ஸ்டாா்க்.

அடுத்து பானுகா களம் புகுந்தாா். இந்நிலையில் அவிஷ்கா 4, வனிந்து ஹசரங்கா 4, கேப்டன் டாசன் ஷனகா 1 பவுண்டரியுடன் 12 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் பானுகா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33, சமிகா கருணாரத்னே 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டாா்க் 2, கம்மின்ஸ் 2, ஸாம்பா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

பின்னா் ஆடிய ஆஸ்திரேலியாவில் தொடக்க ஜோடியான டேவிட் வாா்னா் - கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. இதில் ஃபிஞ்ச் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ்வெல் 5 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

வாா்னா் 10 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசி வெளியேறினாா். ஸ்டீவ் ஸ்மித் 28, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனா். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 2, டாசன் ஷனகா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com