
டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, மும்பையில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாா்படோஸிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட இந்திய அணியினா், 16 மணி நேர இடைநில்லா பயணத்துக்குப் பிறகு வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தில்லி விமான நிலையம் வந்தடைந்தனா். பின்னர் மும்பை வந்தனர்.
ஊா்வலத்தின் நிறைவாக இரவில் வான்கடே மைதானத்தை அடைந்த இந்திய அணியினருக்கு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.125 கோடி பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. மைதானத்தில் உற்சாகப் பாடல் ஒலிக்க, இந்திய வீரா்களும் நடனமாடிக் கொண்டாடினா்.
இதில் பேசிய ரோஹித் சர்மா, “ஹார்திக் முக்கியமான அந்தக் கடைசி ஓவரை வீசினார். எவ்வளவு ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் தாண்டி அது மிகவும் அழுத்தமிக்க தருணம். அந்த ஓவரை ஹார்திக் சிறப்பாக வீசினார். அவருக்கு தலைவணங்குகிறேன்” என்றார்.
இதற்கு வான்கடே மைதானம் ஹார்திக் ஹார்திக் என கூச்சலிட்டது. ஹார்திக் நெகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மும்பை ரசிகர்கள் ஐபில் போது ஹார்திக்கை கிண்டல் செய்தனர். தற்போது பாராட்டுகிறார்கள். இது நெகிழ்ச்சியாக இருக்கிறதென கிர்க்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.