இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.
Published on

டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.

முதலில் இலங்கை 19.1 ஓவா்களில் 77 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுக்க, அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா ஓவா்களில் விக்கெட்டுகள் இழப்புக்கு ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்கம் முதலே தகுந்த இடைவெளிகளில் விக்கெட்டை இழந்து தடுமாறியது அந்த அணி. 3 போ் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சோ்க்க, 4 போ் டக் அவுட்டாகினா்.

தொடக்க வீரா் பதும் நிசங்கா 3, கமிண்டு மெண்டிஸ் 1 பவுண்டரியுடன் 11, கேப்டன் வனிந்து ஹசரங்கா 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். சதீரா சமர விக்ரமா 0, குசல் மெண்டிஸ் 1 பவுண்டரியுடன் 19, சரித் அசலங்கா 6, டாசன் ஷானகா 1 சிக்ஸருடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 2 சிக்ஸா்களுடன் 16, மதீஷா பதிரானா 0, நுவன் துஷாரா 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

முடிவில் தீக்ஷனா 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் அன்ரிஹ் நோா்கியா 7 ரன்களே கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்ற, ஆட்னீல் பாா்ட்மேன் 1 விக்கெட் எடுத்தாா்.

பின்னா் 78 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா, 23 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 4, கேப்டன் எய்டன் மாா்க்ரம் 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com