டி20 உலகக் கோப்பையில் குரூப் சி-யில் உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இன்று அதிகாலை (இந்திய நேரப்படி காலை 5மணி ) மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா 19.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய உகாண்டா அணி 18.2 ஓவரில் 78/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் உகாண்டா பந்து வீச்சாளர் 43 வயது உகாண்டா பந்து வீச்சாளர் புதிய சாதனை படைத்துள்ளார்.
4 ஓவர்கள் வீசிய பிராங்க் நுசுபுகா 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டி20 உலகக் கோப்பையில் இதுதான் சிறந்த எகானமியாக இருக்கிறது. இதற்கு முன்பாக அன்ரிச் நார்ஜே இலங்கைக்கு எதிராக 7 ரன்கள் கொடுத்திருந்தார்.
43 வயதில் இந்த சாதனையை படைத்த பிராங்க் நுசுபுகாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.