ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ராவை அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் வெறும் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா அபார பந்துவீச்சை வெளிபடுத்தியதாக அவருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா அவரது பந்துவீச்சை திறமையை நன்றாக புரிந்து வைத்துள்ளார். ரஹ்மனுல்லா குர்பாஸின் விக்கெட்டினை மெதுவான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர் கைப்பற்றினார். அவரது பந்துவீச்சுத் திட்டங்களை கச்சிதமாக செயல்படுத்துகிறார். ஒவ்வொரு பந்துவீச்சாளரும் அவர்களது பந்துவீச்சில் மாற்றத்தை கொண்டுவருவார்கள். ஆனால், அழுத்தமான சூழலில் பந்துவீச்சில் மாற்றத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது கடினம். அதனை முக்கியமான போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா சரியாக செயல்படுத்துகிறார். அந்த திறன் எளிதில் வந்துவிடாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.