
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் 2009 ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்தே டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் இந்திய வீரர்களான விராட் கோலி (1170 ரன்கள்), ரோஹித் சர்மா (1039 ரன்கள்) மற்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேலா ஜெயவர்த்தனே (1016 ரன்கள்) மட்டுமே ஆயிரம் ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளனர். இவர்களது வரிசையில் இடம்பெற டேவிட் வார்னருக்கு இன்னும் 25 ரன்களே தேவைப்படுகின்றன.
சூப்பர் 8 சுற்றில் அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் 25 ரன்கள் எடுக்கும்பட்சத்தில், டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.