டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்த விராட் கோலி!
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் மிக மோசமான வீரராக மாறியுள்ளார் விராட் கோலி.
அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. கடைசி 6 போட்டிகளிலும் மோசமாக விளையாடிய விராட் கோலி முக்கியமான இந்தப் போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
இருப்பினும் ரோஹித் சர்மா நன்றாக விளையாடியதால் இந்திய அணி நல்ல ரன்களை குவிக்க முடிந்தது.
இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலியின் ரன்கள் 1,4,0,24,37,0,9 என மொத்தமாக 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரியாக 10.71 என இருக்கிறது.
குறைந்தபட்சம் 6 போட்டிகள் கொண்ட டி20 உலகக் கோப்பையில் மிக மோசமான வீரராக விராட் கோலி உருவாகியுள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கோலியும் 2ஆவது இடத்தில் வங்கதேசத்தை சேர்ந்த தன்ஜித் ஹாசன் சராசரி 10.86 ஆகவும் இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பையில் மோசமான சராசரி கொண்ட பட்டியல்:
1. விராட் கோலி - 10.71 (2024)
2. தன்ஜித் ஹாசன் - 10.86 (2024)
3. தமிம் இக்பால் - 11.86 (2014)
4. கைல் கோட்சர் - 12.00 (2021)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.