2011இல் தோனியும் பெரிதாக ரன் அடிக்கவில்லை: கோலிக்கு ஆதரவாக முன்னாள் வீரர்!
டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இன்று இரவு தெ,ஆ. அணியுடன் மோதுகிறது.
இந்த டி20 உலகக் கோப்பையின் தொடர் முழுவதும் ( 7 போட்டிகளிலும்) மோசமாக விளையாடியுள்ளார் விராட் கோலி. அதாவது 1,4,0,24,37,0,9 என மொத்தமாக 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரியாக 10.71 என இருக்கிறது. மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
ரோஹித் சர்மா கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்நிலையில் இது குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியதாவது:
2011 உலகக் கோப்பையில் தோனிக்கும் சிறப்பாக அமையவில்லை, ஆனால் இறுதிப் போட்டியில் தனது ஃபார்மினை தோனி மீட்டார் என்பதை விராட் கோலி நினைவுப்படுத்தி கொள்ள வேண்டும். விராட் கோலி கடுமையாக உழைத்து ரன்களை எடுப்பவர்; பந்துகளை வீணாக்காமல் ரன் அடிப்பார். உலகின் எந்த ஒரு பந்து வீச்சாளர்களையும் எதிர்த்து அடிக்கும் திறமைசாலி.
குலசேகராவின் ஓவரில் தோனி லாங்-ஆனில் அடித்த சிக்ஸர்தான் எல்லோருடைய மனதிலும் நிற்கிறது. அதேபோல், விராட் கோலி இன்று நாயகனாக மாற ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
தனது மோசமான ஃபார்மினை கோலி மறந்துவிட வேண்டும். ஈடன் காடர்னில் தெ.ஆ. எதிராக ஒருநாள் உலகக் கோப்பையில் கோலி சதமடித்தார். அந்த நாளில் கோலி சிறப்பாக விளையாடினார். கிரிக்கெட்டிங் ஷாட்டுகள் ஆடியே இந்த ரன்களை பெற்றார். அதனால் கோலி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.