ரோஹித் சர்மா, விராட் கோலியின் இடத்தை நிரப்ப நேரமெடுக்கும்: பிசிசிஐ தலைவர்

இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவதற்கு நேரமெடுக்கும் என பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி
உலகக் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிபடம் | பிசிசிஐ

இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவதற்கு நேரமெடுக்கும் என பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தனர்.

உலகக் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு!

இந்த நிலையில், இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவதற்கு நேரமெடுக்கும் என பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

ரோஜர் பின்னி
ரோஜர் பின்னி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். நிறைய திறமைவாய்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய அணிக்கு வருகின்றனர். ஆனால், இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவதற்கு நேரமெடுக்கும். இந்திய அணிக்காக அவர்கள் இருவரும் நிறைய பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவர்கள் இருந்தபோது உள்ள வலிமையான இந்திய அணி உருவாக இன்னும் 2-3 ஆண்டுகள் ஆகும் என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com