பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காவல் துறையில் வழக்கு கோப்புகள் எழுத ஆள் தேடும் நிலை

சிதம்பரம், ஆக. 28:  காவல் துறையில், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை தயாரிப்பது உள்ளிட்ட கோப்புகளை தயாரிக்கத் தெரியாமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:53 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், ஆக. 28:  காவல் துறையில், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை தயாரிப்பது உள்ளிட்ட கோப்புகளை தயாரிக்கத் தெரியாமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

  காவல் நிலையத்திற்கு வரும் புகாரைப் பெற்று புகாரின் சாராம்சம்படி எந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்வது என்பதை தலைமைக் காவலரோ அல்லது சப்-இன்ஸ்பெக்டரோ முடிவு செய்து முதல் தகவல் அறிக்கை எழுத வேண்டும்.

  தற்போது தலைமைக் காவலர்களாக இருந்து பதவி உயர்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இதுகுறித்த பயிற்சி இல்லாததால் அவர்களுக்கு எழுதத் தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் 46 காவல் நிலையங்கள் உள்ளன. தலைமைக் காவலர்களாக இருந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக 96 பேரும், காவலர்களிலிருந்து தலைமைக் காவலர்களாக 350 பேரும் அண்மையில் பதவி உயர்வு பெற்றனர்.

   குறிப்பாக ஆயுதப்படை பிரிவிலிருந்து சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டு வரும் தலைமைக் காவலர்களுக்கும் எழுதத் தெரியவில்லை. இதனால் பல காவல் நிலையங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் வழக்கு கோப்புகள் தேங்கியுள்ளன என மூத்த இன்ஸ்பெக்டர் ஒருவர் தெரிவித்தார்.

   குறிப்பாக சிதம்பரம் கோட்டத்தில் வழக்கு கட்டுகள் எழுதும் பணியில் ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஒரத்தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஈடுபட்டு வருகிறார். அவர் காவல் நிலையங்களுக்குச் சென்று வழக்கு கட்டுகள் எழுதித் தருகிறார். அவருக்கு ஒரு கட்டுக்கு ரூ.100 வீதம் போலீஸôரால் வழங்கப்படுகிறது.

  குறிப்பாக சிதம்பரத்தில் பேராசிரியர் ஒருவரிடம் தென்னாப்பிரிக்க வாலிபர் ரூ.32 லட்சம் முறைகேடு செய்த வழக்கில், கட்டு எழுத வேறு காவல் நிலையத்திலிருந்து தலைமைக் காவலர் அழைத்து வரப்பட்டார். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் கட்டு எழுத ஆள்கள் தேடும் நிலை காவல் துறையில் தற்போது ஏற்பட்டுள்ளது.

  எனவே காவல் நிலைய கோப்புகளை பராமரிக்கவும், முதல் தகவல் அறிக்கை எழுதுவது, எந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்வது, வழக்கு கட்டுகள் எழுதுவது குற்றப்பத்திரிகை நகல் தயாரிப்பது ஆகியவை குறித்து தலைமைக் காவலர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.