பொன்னேரி, அக். 6: பழவேற்காடு பகுதி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையான பழவேற்காடு- லைட்ஹவுஸ் குப்பம் மேம்பாலப் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் கடலோரக் கிராமமான பழவேற்காட்டை அடுத்து ஏரிக்கும், கடலுக்கும் நடுவே உள்ளது லைட்ஹவுஸ் குப்பம்.
இதைச் சுற்றி அரங்கம்குப்பம், கூனங்குப்பம், சாட்டங்குப்பம், திருமலைநகர், செம்பாசி பள்ளிகுப்பம், வைரவன் குப்பம், பசியாவரம் குப்பம், நடுக்குப்பம், கோரைக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மேம்பால திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் சுனாமி நிதியுதவித் திட்டத்தின்கீழ் ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பால கட்டுமானப் பணிகள் தொடங்கின.
1075 மீட்டர் நீளத்திலும், 12 மீட்டர் அகலத்திலும் மற்றும் அடியில் 21 காங்கிரீட் தூண்கள் நிறுவப்பட்டு, அயராது பணிகள் துரிதமாக நடைபெற்றதால், தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
எஞ்சியுள்ள 10 சதவீத கட்டுமானப் பணிகளும் வரும் நவம்பர் மாதத்திற்குள் முழுவதுமாக முடிவடையும் நிலையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


