சென்னை, அக். 29:தமிழகத்தில் தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய பின்தங்கிய மாவட்டங்களில் முதற்கட்டமாக 18 மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளன.
இதற்காக தமிழகத்திற்கு ரூ.3 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் (ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷ அபியான் - ஆர்.எம்.எஸ்.ஏ.) கீழ் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மாணவிகளை கல்வியில் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சி.பி.எஸ்.இ-க்கு இணையான...: இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களில் "மாதிரி பள்ளிகள்' உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்பள்ளிகள் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நிகராக அமைய உள்ளது. நகர்ப்புற மாணவ-மாணவிகளுக்கு என்ன மாதிரியான கல்வி கிடைக்கிறதோ, அதேபோல தரமான கல்வியை கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்க இந்த மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.
சேலம், ஈரோடு...: தமிழகத்தில் அரியலூர், கடலூர், தருமபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பின்தங்கிய ஒன்றியங்களில் "மாதிரி பள்ளிகளை' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 18 ஒன்றியங்கள் தேர்வு...: முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்தில் நல்லூர், பண்ருட்டி; தருமபுரியில் கெலமங்கலம், பென்னகரம், சோழகிரி; ஈரோட்டில் அம்மாப்பேட்டை, மூலனூர், நம்பியூர்; கரூரில் கடவூர்; நாமக்கல்லில் கொல்லிமலை; சேலத்தில் எடப்பாடி, கடையாம்பட்டி, கொங்கணாபுரம், எஸ்.புதூர்; விழுப்புரத்தில் ரிஷிவந்தியம், தியாகதுர்கம், திருக்கோயிலூர் ஆகிய 18 ஒன்றியங்களில் "மாதிரி பள்ளிகள்' கட்டப்பட உள்ளன.
ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு: மாதிரி பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியும் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளன. முதற்கட்டமாக தமிழகத்திற்கு ரூ.3 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
"மாதிரி பள்ளிகளை' அமைக்க ஒன்றியங்களில் காலி இடங்களை தெரிவு செய்தல், ஏற்கெனவே செயல்பட்டு வரும் பள்ளிகளில் போதிய இடவசதி இருப்பது குறித்து கணக்கெடும் பணி நடந்து வருகிறது. இந்தப் பின்தங்கிய மாவட்டங்களில் 44 மாணவியர் விடுதிகள் கட்டப்பட உள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

