ன்னை, மார்ச் 31: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பதவி உயர்வு எப்போது கிடைக்கும் என்று பல ஆண்டுகளாக பணிமனை உதவிப் பொறியாளர்கள் காத்திருக்கின்றனர்.
அதிரடி தாற்காலிக பணி நீக்கம் தொடர் கதையாகி வருவதால், ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவிட்ட போதும் பதவி உயர்வுக்கு தகுதி பெறுவோமா என்ற அச்சம் பணிமனை உதவிப் பொறியாளர்களிடையே எழுந்துள்ளது. நிர்வாகக் குறைபாட்டை மறைக்க தொடர்ந்து இவர்களுக்கு தாற்காலிக பணி நீக்கம் அளிக்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் தஞ்சாவூர் பணிமனை அதிகாரி ஒருவருக்கு காலவரையற்ற தாற்காலிக பணி நீக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதுபோல் சென்னை கோயம்பேடு "பணிமனை}4' அதிகாரி காலவரையற்ற தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் பணிமனை பிரிவு மேலாளரும் (பொறுப்பு) தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உதவிப் பொறியாளர்கள் ஆறு ஆண்டுகள் பணி முடித்த பின், சீனியர் பொறியாளர் பதவியும், அடுத்த ஆறாண்டு பதவிக்குப் பின் செலக்ஷன் கிரேடு பொறியாளர், பின்னர் உதவி மேலாளர் (பிரிவு மேலாளர்) என பதவி உயர்வுகள் வழங்கப்படும்.
இதில் சீனியர் பொறியாளர் பதவி உயர்வு மட்டும் இதுவரை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் செலக்ஷன் கிரேடு பொறியாளர், உதவி மேலாளர் பணியிடங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் இப்போது எட்டு உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல், உதவி மேலாளர் பொறுப்பில் உதவிப் பொறியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் கூடுதலாக எந்த பலனும் இவர்களுக்கு கிடைக்காது.
இதுகுறித்து பணிமனை உதவி பொறியாளர் ஒருவர் கூறியது:
பஸ்கள் விபத்துக்கு உள்ளாவதற்கு, போதிய உதிரி பாகங்கள் இல்லாததுதான் காரணம். பேட்டரிகள், செல்ஃப் மோட்டார், ஏர் பலூன் ஆகியவை போதிய அளவில் வாங்கித் தரப்படுவதில்லை. "லொக்கேட்டிங் லிங்க்' போதிய அளவில் இல்லாததால், ஏராளமான பஸ்கள் ஒரு பக்கமாக இழுத்தபடி செல்கின்றன.
இதனால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உதிரிப் பாகங்கள் போதிய அளவில் வாங்கிக் கொடுத்தால், பஸ்கள் விபத்துக்கு உள்ளாகாது. ஆனால், விபத்துக்கு பணிமனை உதவிப் பொறியாளர்கள் பொறுப்பாக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர் என்றார்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இப்போதைய நிர்வாக இயக்குனர் இன்னும் ஒரு சில தினங்களில் ஓய்வு பெறப்போகிறார்.
எனவே, வரவுள்ள புது நிர்வாக இயக்குனர் உண்மை நிலையை உணர்ந்து, பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்க வழி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு, பணிமனை உதவிப் பொறியாளர்களிடையே எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

