நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 3,500 கிராமப்புற மாணவர்களுக்கு ரயிலில் இலவச கல்விச் சுற்றுலா

சென்னை, ஏப். 25: தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 8}ம் வகுப்பு பயிலும் எஸ்.சி, எஸ்.டி. மற்றும் சிறுபான்மை மாணவர்கள் 3,500 பேர் ரயிலில் இலவச கல்வி சுற்றுலா செல்லும் திட்டத்துக்கு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:43 am

ச. குமரன்

சென்னை, ஏப். 25: தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 8}ம் வகுப்பு பயிலும் எஸ்.சி, எஸ்.டி. மற்றும் சிறுபான்மை மாணவர்கள் 3,500 பேர் ரயிலில் இலவச கல்வி சுற்றுலா செல்லும் திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்காக அரசு ரூ. 1.20 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த சிறப்பு திட்டத்தில், மாணவிகள் 75 சதவீதம் பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் } இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஆகியவை இணைந்து மாணவர்களுக்கு இந்த கோடை கால சுற்றுலா சேவையை விரைவில் வழங்க உள்ளன.

÷இதில் அனைத்து மாணவர்களுக்கும் உணவு, பயணக் கட்டணம் இலவசம்.

வரலாற்று, கலாசார சிறப்புமிக்க இடங்களுக்கு 3 நாள்கள் சுற்றுலாவாக மாணவ, மாணவிகளுடன் பாதுகாவலர்களாக 350 ஆசிரியைகளும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

÷10 மாணவிகளுக்கு தலா ஓர் ஆசிரியை பாதுகாவலராக கட்டாயம் செல்ல வேண்டும்.

படைப்பாற்றல் கல்வியை (ஏ.எல்.எம்.) சிறப்பாக செயல்படுத்தும் அரசு நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையோர் சமுதாய மாணவிகளின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்தந்த பள்ளிகளின் சார்பில், இத் திட்டத்துக்கான பிரத்யேக ரயில்வே பயணச் சலுகை படிவத்தைப் பூர்த்தி செய்து, அனைவருக்கும் கல்வி திட்ட மாநில அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் ரயில் சுற்றுலா: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மிகவும் பின்தங்கிய சமுதாயங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து அகில இந்திய அளவில் ரயிலில் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை ஐஆர்சிடிசி வடிவமைத்துள்ளது.÷இத்திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ரயில் சுற்றுலா: இவை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் சேர்ந்த மாணவர்களும் ரயிலில் குழு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள புதிய பயணத் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரம்:

சென்னையில் இருந்து புறப்பட்டு 3 பகல் மற்றும் 4 இரவுகள் பயணமாக முக்கிய சுற்றுலா இடங்களைப் பார்வையிட்ட பின் மீண்டும் சென்னை திரும்பலாம்.

சென்னை} ஊட்டி} குன்னூர்} பிளாக் தண்டர்} சென்னை.

சென்னை} கொடைக்கானல்} மதுரை} சென்னை.

சென்னை} ஊட்டி} மைசூர்} சென்னை.

சென்னை} கன்னியாகுமரி} திருவனந்தபுரம்} சென்னை.

சென்னை} ஹைதராபாத்} சென்னை.

சென்னை} கொச்சி} மூணாறு} சென்னை.

சென்னை} விசாகப்பட்டினம்} சென்னை.

இதில் ஒவ்வொரு சுற்றுலா பயணத்துக்கும் உணவு, தங்கும் இடம், உள்ளூர் சுற்றுலா வாகன கட்டணம் உள்பட தலா ரூ. 2,500 ஆகும்.

நீச்சலுக்கு தடை: சுற்றுலா இடங்களில் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் இறங்கி நீராடவோ அல்லது நீச்சல் அடிக்கவோ அனுமதி வழங்கப்படாது.அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒப்புதலுடன் முன்பதிவு செய்யலாம். குழுவாக செல்லும் மாணவர்களுக்கு பயணக் கட்டணச் சலுகை உண்டு. இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம். தொ.பே. எண்கள்: 044} 6459 4959, 9003140681, 9003140681.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.