இதேபோல கோவை- திருப்பதி (சேலம், காட்பாடி, பாகலா வழியாக) இன்டர்சிட்டி வாரம் மும்முறை விரைவு ரயில் (2757, 2758), மதுரை- திருப்பதி இடையே (மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், காட்பாடி வழியாக) வாரம் இருமுறை விரைவு ரயில் (2762, 2761), திருச்சி-மங்களூர் (போத்தனூர் வழியாக) வாராந்திர விரைவு ரயில் (2653, 2654), நாகர்கோவில்- பெங்களூர் வாராந்திர விரைவு ரயில் (6537, 6538), சென்னை சென்ட்ரல்- ஹால்தியா வாராந்திர விரைவு ரயில் (2755, 2756), சென்னை சென்ட்ரல்- நியூ ஜல்பைகுரி வாராந்திர விரைவு ரயில் (2753, 2754) ஆகிய ரயில்களின் சேவை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன.