பொன்னேரி, பிப். 7: சோழவரம் ஒன்றியம், காரனோடை பகுதியில் பஸ் நிலையம் அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
பொன்னேரி வட்டத்துக்கு உள்பட்ட காரனோடையைச் சுற்றி ஆத்தூர், சோத்துபெரும்பேடு, சோழவரம், புதிய எருமை வெட்டி பாளையம், பழைய எருமை வெட்டி பாளையம், தேவனேரி, செக்கஞ்சேரி, நெற்குன்றம், கம்மார்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 20 ஆயிரத்துத்தும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் வாங்க காரனோடைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. அதே போன்று இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக சென்னை, செங்குன்றம், கோயம்பேடு, பொன்னேரி, கும்மிடிபூண்டி ஆகிய ஊர்களுக்குச் செல்லவும் காரனோடைக்கு வந்துதான் செல்லவேண்டி உள்ளது.
இதன் காரணமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வள்ளலார்நகர், செங்குன்றம், மாதவரம், பிராட்வே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பஸ்களை காரனோடை பகுதிக்கு இயக்கி வருகிறது. ஆனால், காரனோடை பகுதியில் நின்று பொதுமக்களை ஏற்றிச்செல்ல அங்கு பஸ் நிலையம் இல்லாதால் இந்த பஸ்கள் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலை உள்ளது.இதையடுத்து, இங்கு பஸ் நிலையம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கை இன்று வரை கேட்பாரற்று உள்ளது.எனவே, இனிமேலாவது இதற்கான நடவடிக்கையை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


