நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

2010-11-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்: வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 3,000 கோடி தேவை!

சென்னை, பிப்.16: 2010-11-ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 3,000 கோடி நிதி ஒதுக்கீடு தேவை என தெற்கு ரயில்வே கோரியுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடுகளுடன் சிறப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:20 am

ச. குமரன்

சென்னை, பிப்.16: 2010-11-ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 3,000 கோடி நிதி ஒதுக்கீடு தேவை என தெற்கு ரயில்வே கோரியுள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீடுகளுடன் சிறப்பு கருத்துருக்களை ரயில்வேத் துறைக்கு தெற்கு ரயில்வே அனுப்பியுள்ளது. வரும் ஆண்டில் நிறைவேற்ற தேர்வு செய்யப்பட்டுள்ள முக்கிய திட்டங்களின் விவரம்:

அகலப் பாதை திட்டங்கள்: இதில் அகலப் பாதைப் பணிகளுக்காக (293 கிலோ மீட்டர்) ரூ. 606 கோடியில் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2-வது மற்றும் 3-வது அகலப் பாதைப் பணிகளுக்காக (87 கிலோ மீட்டர்) ரூ. 366 கோடி ஒதுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேபோல புதிய அகலப் பாதைப் பணிகளுக்காக (61 கிலோ மீட்டர்) ரூ. 280 கோடி ஒதுக்கவும் கோரப்பட்டுள்ளது.

இவை உள்பட ரயில்வே கட்டுமானப் பணிகளுக்காக மட்டும் ரூ. 1,530 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது.

ரயில் பாதைகள், பாலங்கள், சிக்னல்கள், மின் இணைப்புகள், பணிமனைகள் ஆகியவற்றைப் பராமரிக்கும் பணிகளுக்காக ரூ. 1,470 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான வசதிகள்: ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குடிநீர், பிளாட்பாரம் விரிவாக்கம், ஓய்வறைகள், இணைப்புச் சாலைகள், இருக்கை வசதி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்காக ரூ. 150 கோடியில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ரயில்வே பட்ஜெட்டில் இந்தப் பணிகளுக்காக ரூ. 80 கோடி மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

நிதியில்லாமல் முடங்கிய திட்டங்கள்: கடந்த பட்ஜெட்டில் தமிழகத்தின் முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருந்தது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் நிலுவையில் உள்ளன.

இதில் ரூ. 498 கோடி மதிப்பீட்டிலான இரண்டாவது அகலப் பாதை திட்டங்கள் நித்திரையில் உள்ளன. இதன் விவரம்:

செங்கல்பட்டு- விழுப்புரம் (53 கி.மீ.) எண்ணூர்- அத்திப்பட்டு (6 கி.மீ.) ஆகிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதே போல ரூ. 613 கோடியிலான, சேலம்- நாமக்கல் (51 கி.மீ.), நாகூர்- காரைக்கால் (10 கி.மீ.) ஆகிய திட்டங்களும் முடங்கியுள்ளன.

இவை தவிர, ரூ. 639 கோடியிலான திருநெல்வேலி- தென்காசி (72 கி.மீ.), மயிலாடுதுறை- திருவாரூர் (38 கி.மீ.), மானாமதுரை- விருதுநகர் (67 கி.மீ.), பாலக்காடு- பொள்ளாச்சி (58 கி.மீ), திண்டுக்கல்- பழனி (58 கி.மீ.) ஆகிய அகலப் பாதை திட்டங்களுக்கும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை.

இதனால், "கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத' நிலையில் இத்திட்டங்கள் "பெயரளவில்' ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதோடு நிற்கின்றன.

அனுமதியை எதிர்நோக்கியுள்ள திட்டங்கள்: சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை 3-வது அகலப் பாதை (ரூ. 53.60 கோடி).

சென்னை கடற்கரை- அத்திப்பட்டு 4-வது அகலப் பாதை (ரூ. 103.25 கோடி).

மதுரை- போடிநாயக்கனூர் அகலப் பாதை (ரூ. 200.90 கோடி).

திருச்சி- தஞ்சாவூர்- நாகூர்- காரைக்கால் அகலப் பாதை மற்றும் நாகப்பட்டினம்- வேளாங்கன்னி, நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி (திருத்திய மதிப்பீடு ரூ. 535.13 கோடி), திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகலப் பாதை (ரூ. 574 கோடி) ஆகிய திட்டங்கள் ரயில்வே வாரியத்தின் அனுமதி பெற அனுப்பப்பட்டுள்ளன.

எனினும், இந்தத் திட்டங்கள் ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்படுவது மட்டுமன்றி தேவையான நிதியையும் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.