கத்தரிக்காய் விதை ஏக்கருக்கு இரண்டு கிலோ தேவை. இரண்டு கிலோ விதை விலை ரூ. 2,600. உழவு செய்ய டிராக்டர் கூலி, தண்ணீர் பாய்ச்சும் செலவு என ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கருக்கு மூன்று டன் கத்தரிக்காய் விளைச்சல் கிடைக்கிறது. இதன் மூலம் சரியான லாபம் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இங்கு விளைச்சலாகும் கத்தரிக்காய் சென்னை, வேலூர், திருவள்ளூர், திருத்தணி மற்றும் ஆந்திர மாநிலம் நகரி, புத்தூர் ஆகிய பகுதிகளிலும் மொத்த விற்பனைக்குச் செல்கிறது. இதுகுறித்து விவசாயி கோவிந்தன் கூறியதாவது: கோடை காலத்தில் எல்லா பயிர்களும் குறைந்தளவே விளைச்சல் தரும். ஆனால், கத்தரிக்காய் மட்டும் நன்கு செழித்து வளரும். இதனால்தான், வெயில் காலத்தில் கத்தரிக்காயை பயிரிட்டு லாபம் பார்க்கிறோம் என்றார்.