பொன்னேரி, ஜூன் 6: பழவேற்காட்டில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை வரும் 11-ம் தேதி துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இப்பாலம் திறந்து வைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களின் 40-ஆண்டு கால கனவு நனவாகப் போகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கடலோர கிராமமான பழவேற்காட்டில் ஏரிக்கும் கடலுக்கும் நடுவே உள்ளது லைட்ஹவுஸ் குப்பம். இதனை சுற்றிலும் அரங்கம்குப்பம், கூனங்குப்பம், சாட்டங்குப்பம், திருமலைநகர், செம்பாசிப்பள்ளி குப்பம், வைரவன்குப்பம், பசியாவரம், கோரைக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
படகை நம்பி: இங்கு வசிக்கும் மக்கள் மருத்துவமனை, பள்ளி செல்ல, வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் கூட ஏரியை கடந்துதான் செல்ல வேண்டும். ஏரியை கடக்க அவர்கள் விசைப்படகை மட்டுமே நம்பி இருந்தனர்.
ஏரியை கடந்து செல்வதற்கு பாலம் அமைத்துத் தர வேண்டும் என்பது 40 ஆண்டு கால கோரிக்கையாகும். ஓரு வழியாக கோரிக்கை ஏற்கப்பட்டு பாலம் கட்ட உத்தரவிட்டார் முதல்வர் கருணாநிதி. இதையடுத்து ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 17 கோடி மதிப்பீட்டில் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பழவேற்காடு- லைட்ஹவுஸ் குப்பம் இடையே பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின.
பாலம் வந்தது:
ஏரியில் 21 கான்கிரீட் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. பின்னர் 500 மீட்டர் நீளத்திலும் 12 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பாலத்தின் இரண்டு புறமும் 360 மீட்டர் தூரம் பாலத்தை இணைக்கும் சாலை அமைக்கப்பட்டு பாலம் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தன.
பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து பழவேற்காடு-லைட்ஹவுஸ் குப்பம் இடையே கட்டி முடிக்கப்பட்டுள்ள இப்பாலத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11-ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பழவேற்காட்டில் முகாமிட்டுள்ளனர்.
படகுகளுக்கு ஓய்வு: பாலம் திறப்பதன் மூலம் பழவேற்காடு பகுதி மக்களின் 40-ஆண்டு கால கனவு இன்னும் சில தினங்களில் நனவாகப் போகிறது. காலம் காலமாக சுமந்து வந்த படகுகளுக்கு இனி நிரந்தர ஓய்வு கொடுக்கப் போகும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


