ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

இ-டிக்கெட் சேவை கட்டணம் குறைப்பு: நாளை முதல் அமல்

சென்னை, மார்ச் 30: நாடு முழுவதும் ரயில்வே இ}டிக்கெட் பெறுவதற்கான சேவை கட்டணம் குறைப்பு சலுகை வியாழக்கிழமை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. 2010}11}ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், இ}டிக்கெட்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:46 pm

ச. குமரன்

சென்னை, மார்ச் 30: நாடு முழுவதும் ரயில்வே இ}டிக்கெட் பெறுவதற்கான சேவை கட்டணம் குறைப்பு சலுகை வியாழக்கிழமை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது.

2010}11}ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், இ}டிக்கெட் முன்பதிவுக்கான சேவைக் கட்டணம் குறைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இதையடுத்து இந்தச் சலுகையை ஏப்ரல் 1}ம் தேதி முதல் உடனடியாக அமல்படுத்துமாறு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் இ}டிக்கெட் முன்பதிவு செய்வது நாடு முழுவதும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் தினமும் நடைபெறும் ரயில் டிக்கெட் முன்பதிவில் 35 சதவீதம் வரை இ}டிக்கெட் முறையில் தான்டிக்கெட் பெறப்படுகிறது.

முன்பதிவு மையங்களுக்குச் செல்லாமலேயே வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்தவாறு இணையதளம் மூலம் ஆண்டு முழுவதும் (விடுமுறை நாள்களிலும்) தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை முன்பதிவு செய்து எளிதில் இ}டிக்கெட் பெறலாம். இந்தச் சேவையை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி நிறுவனத்துக்காக சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது இந்தக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. புதிய சேவை கட்டண விவரம்} (ரூபாயில்):

தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் (ஸ்லீப்பர்) பயணம் செய்ய ஒரே டிக்கெட்டில் அதிகபட்சம் 6 பேருக்கு முன்பதிவு செய்யலாம். இதற்கான சேவை கட்டணம் இனி ஒரே சீராக (6 பேருக்கும்) ரூ. 10 மட்டுமே வசூலிக்கப்படும்.

(இதற்கு முன்பு முதலாவது பயணிக்கு ரூ. 10, 2}வது பயணிக்கு ரூ. 15, 3}வது பயணிக்கு ரூ. 20, 4}வது, 5}வது, 6}வது பயணிக்கு ரூ. 25}ம் சேவை கட்டணம் பெறப்பட்டது).

பகல் நேரத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் உள்ள சேர் கார் பெட்டிகள், 3 அடுக்கு ஏசி, முதல் வகுப்பு, 2}அடுக்கு ஏசி, முதல் அடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய இனி சேவை கட்டணம் ரூ. 20 மட்டுமே சீராக வசூலிக்கப்படும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் இ}டிக்கெட் பெறுவது குறித்து பல்வேறு தகவல்களை அறிய 24 மணி நேரமும் செயல்படும் ஐ.ஆர்.சி.டி.சி. (ஹெல்ப் லைன்) தொ.பே. எண்} 044}2530 0000.

சென்னையில் இருந்து பல்வேறு முக்கிய இடங்களுக்கு விரைவு ரயில்களில் தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் இப்போதுள்ள பயணக் கட்டண விவரம் (ரூபாயில்):

புது தில்லி} 528, கொல்கத்தா} 461, மும்பை} 403, ஆமதாபாத்} 497, பூனா} 371, ஹைதராபாத்} 312, விஜயவாடா 214, மைசூர்} 232, பெங்களூர்} 193, மங்களூர்} 333, திருவனந்தபுரம்} 337.

திருச்சி} 164, திண்டுக்கல்} 214, மதுரை} 232, விருதுநகர்} 251, திருநெல்வேலி} 282, தூத்துக்குடி} 282, திருச்செந்தூர்} 277, தென்காசி} 259, செங்கோட்டை} 284, நாகர்கோவில்} 300, கன்னியாகுமரி} 305. தஞ்சாவூர்} 178, கும்பகோணம்} 191, காரைக்குடி} 191, கோயம்புத்தூர்} 232, ஈரோடு} 181, சேலம் 164.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.