கடும் வறட்சி: தக்காளி விலை "கிடு கிடு' உயர்வு
திருத்தணி, மே 3: திருத்தணியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, தக்காளி விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருத்தணி காமராஜர் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் தக்காளி பழத்தின் வரத்து பாதியாக குற


திருத்தணி, மே 3: திருத்தணியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, தக்காளி விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருத்தணி காமராஜர் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் தக்காளி பழத்தின் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் தக்காளி விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
தக்காளி விலை உயர்வு பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி நகருக்கு சென்னை, பெங்களூர், வேலூர், மற்றும் ஆந்திரா மற்றும் திருத்தணியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தக்காளி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. ஆனால், திருத்தணிக்கு விற்பனைக்கு வந்து கொண்டுடிருந்த நாணமங்களம், ராமகிருஷ்ணாபுரம், தாழவேடு, பொன்பாடி இப்பகுதியில் ஏற்பட்ட விளைச்சல் குறைவால் சில மாதங்களாக தக்காளி வரத்து மிகவும் குறைந்து உள்ளது.
மேலும் பெங்களூர், சென்னையில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 லோடு தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டு இருந்தது. தற்போது வரத்து குறைந்து ஒரு லோடு மட்டும் விற்பனைக்கு வருகிறது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு வாரத்துக்கு முன்னர் பழங்கள் அனைத்தும் 1 கிலோ 10 ரூபாய்க்கு குறைவாக விற்கப்பட்டு வந்தது. திருத்தணியில் சில தினங்களுக்கு முன் நாட்டுத் தக்காளி கிலோ எட்டு ரூபாய்க்கு விற்று வந்தது, திங்கள்கிழமை கிலோ 15 ரூபாய்க்கு உழவர் சந்தையிலும், வெளி மார்க்கெட்டில் 20 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
கடந்த 10 நாளுக்கு முன் 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்ற, 15 கிலோ கொண்ட பெட்டி ஒன்று தற்போது 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கிறது. கிலோ 10 ரூபாய்க்கு விற்று வந்த நாட்டுத் தக்காளி கிலோ 14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதே போன்று சென்ற வாரம் வரை 12 ரூபாய்க்கு விற்று வந்த பெங்களுர் தக்காளி வரத்து குறைவு காரணமாக தற்போது கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதுகுறித்து ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமைய்யா கூறியதாவது: தற்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக ஏரிகள் மற்றும் கிணறுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார தடை காரணமாக மோட்டார்களை இயக்கி பயிர்களுக்கு தேவையான தண்ணீரை பாய்ச்ச இயலவில்லை. இதன் காரணமாக தக்காளி பயிர்கள் மட்டுமின்றி பிற பயிர்களும் தண்ணீர் கிடைக்காமல் கருகி வருகிறது.
இந்நிலை தொடரும் பட்சத்தில் அனைத்து காய்கறிகளின் வரத்திலும் சரிவு ஏற்பட்டு, விலையில் கடும் உயர்வு ஏற்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...