பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மும்முரமான விற்பனையில் பனை ஓலை விசிறிகள்

திருத்தணி,  மே 4: அக்னி வெயிலை கட்டுப்படுத்தி குளிர் காற்று தரும் பனை ஓலை விசிறிகள் தயாரிக்கும் பணியில் ஒரு கிராமமே ஈடுபட்டுள்ளது. சில மாதங்களாகவே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:55 pm

ஜி. யோகானந்தம்

திருத்தணி,  மே 4: அக்னி வெயிலை கட்டுப்படுத்தி குளிர் காற்று தரும் பனை ஓலை விசிறிகள் தயாரிக்கும் பணியில் ஒரு கிராமமே ஈடுபட்டுள்ளது.

சில மாதங்களாகவே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. காலை 8 முதல் மாலை 5.30 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக அனல் காற்றுடன் வீசுகிறது.   மேலும் வீட்டில் மின் விசிறிகளில் இருந்து வரும் காற்றும் அனல் காற்றுடன் வீசுவதால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை நிம்மதியாக தூங்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் உறங்க முடியாமல், புழுக்கம் அதிக அளவு ஏற்படுவதால் பொதுமக்கள் நள்ளிரவில் தூங்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.

மேலும் புழுக்கத்திலிருந்தும், அனல் காற்றிலிருந்தும் பொதுமக்கள் தப்பிக்க பனை ஓலை விசிறிகளை தேடி வாங்கி உபயோகிக்கின்றனர். பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் ஒரு கிராமமே ஈடுபட்டு வருகின்றது. திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை அருகே உள்ளது சிறுகுமி கிராமம்.

இக்கிராமத்தில் 400 குடும்பங்கள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் மூன்று மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விசிறிகள் திருவள்ளூர், சென்னை, வேலூர், வாலாஜா, ஆற்காடு, ஆரணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சில்லரை விற்பனையாகவும், மொத்த விற்பனையாகவும் செய்து வருகின்றனர்.

ஒரு விசிறி தயாரிக்க ரூ.2 முதல் ரூ.3 வரை செலவாகிறது. சென்ற ஆண்டு ஒரு விசிறியின் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்துள்ளோம். ஆனால் இந்க ஆண்டு  ஒரு விசிறியை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்கின்றோம். சென்ற ஆண்டை காட்டிலும் சற்று விற்பனை அதிகரித்துள்ளது.

இது குறித்து விசிறி தயாரிக்கும் தொழிலாளி தியாகராஜன் கூறுகையில், "தற்போது கோடைக் காலம் என்பதால் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம். இந்த சீசன் 4 மாதம் மட்டும். ஒரு பனை ஓலையை ரூ.1-க்கு வாங்கி வந்து விசிறி தயாரித்து அதற்கு வண்ணம் பூசி காயவைத்து பிறகு விற்பனைக்கு எடுத்து செல்கிறோம்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பனை ஓலை விசிறி வியாபாரம் சூடுபிடித்துள்ளது’ என்றார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த தேசம்மாள் கூறுகையில், "எங்கள் குடும்பத்தில் உள்ள அனைரும் கடந்த ஜனவரி மாதம் முதல் விசிறி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு இந்த தொழிலைவிட்டால் வேறு எந்த ஒரு வேலைக்கும் செல்வதில்லை. ஒரு நாளைக்கு 30 முதல் 50 விசிறிகள் வரை நாங்கள் செய்கின்றோம். தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும் பனை ஓலை விசிறிகளை அதிக அளவில் வாங்கி உபயோகிக்கின்றனர்.

காலம் செல்ல செல்ல அதிநவீன வளர்ச்சியானாலும், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. என்னதான் புதிது புதிதாக பேன், ஏர்கூலர், ஏசி என வந்தாலும் பனை ஓலை விசிறியை மக்கள் மறப்பதில்லை. பனை ஓலை விசிறியிலிருந்து ஜில்லுன்னு வரும் காற்று உடல் நலத்துக்கு ஏற்றது என மக்கள் மத்தியில் கூறப்படுகிறது என்றார் அவர்.

திருத்தணி பஸ் நிலையத்தில் விற்பனை செய்யப்படும்

பனை ஓலை விசிறிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.