மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

20 கிராமங்களுக்கு செல்ல ஒரே ஒரு பஸ்

பொன்னேரி,  மே  6:   பொன்னேரியில் இருந்து ஆலாடு வழித்தடத்தில் உள்ள 20 கிராமங்களுக்கு செல்ல ஒரே பஸ் இயக்கப்படுவதால் இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். பொன்னேரியில் உ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:00 pm

பொன்னேரி,  மே  6:   பொன்னேரியில் இருந்து ஆலாடு வழித்தடத்தில் உள்ள 20 கிராமங்களுக்கு செல்ல ஒரே பஸ் இயக்கப்படுவதால் இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மீஞ்சூருக்கு டி-40 என்ற பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் பொன்னேரியில் இருந்து ஆலாடு, கொளத்தூர், சின்னமனோபுரம், பெரியமனோபுரம், ரெட்டிபாளையம், ஆர்.எஸ். புதூர், தத்தைமஞ்சி, காட்டூர், திருவெள்ளைவாயல், நெய்தவாயல், வாயலுர் குப்பம் உள்ளிட்ட 20 கிராமங்கள் வழியாக மீஞ்சூர் சென்று வருகிறது.

அத்துடன் இதே வழித்தடத்தில் மாதவரம் பணிமனையில் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் எண் (558-ஏ) இயக்கப்படுகிறது. இந்த பஸ் எந்த நேரம் வரும் என அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கே தெரியாத நிலை உள்ளது.மேற்கண்ட கிராமங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்துக்கும் பொன்னேரி அல்லது மீஞ்சூர் வந்து செல்ல வேண்டும். மேற்கண்ட கிராமங்கள் உள்ள இவ்வழித்தடத்தில் டி-40 பஸ் 5 முறை மட்டுமே இயக்கப்படுவதாகவும் பல்வேறு வேலை காரணமாக பொன்னேரி வந்து செல்லும் மக்கள் இந்த பஸ்ûஸ தவற விட்டால் பஸ் மீஞ்சூர் சென்று பொன்னேரி திரும்பும் வரை 4 மணி நேரம் வரை பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது எனவும், இது போன்ற நேரங்களில் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர் என அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சென்னை உள்ளிட்ட நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஏசி பஸ், சொகுசு பஸ், தாழ்தள பஸ் என புதுப்புது பெயர்களில் பஸ்களை இயக்கும் தமிழக அரசு இது போன்ற கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதிகளில் அதிக அளவிலான பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.