40 சதவீதம் வழங்கப்படும்: தகுதியுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் இருந்து நூல்கள் வழங்கப்பட்டன. அவை தகுதியானவையா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட நெசவுக்கூடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இலவச வேட்டி-சேலைகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்யேக எண் அளிக்கப்படும். இதன்மூலம் போலிகளாகத் தயாரித்த வேட்டி-சேலைகளை இடையில் கலக்க முடியாது. கடும் கட்டுப்பாடுகளுடன் இலவச வேட்டி-சேலைகள் தயாராகி வருகின்றன. ஜனவரி 10-ம் தேதிக்குள் 30 சதவீதம் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகை தொடங்கும் நேரத்தில் வழங்கப்படும். ஜனவரிக்குள் 40 சதவீதப் பயனாளிகளுக்கு இலவச வேட்டி-சேலைகள் அளிக்கப்பட்டுவிடும். தமிழ்ப் புத்தாண்டுக்குள் பயனாளிகளுக்கு முழுமையான அளவில் வழங்கப்படும் என தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.