சென்னை, ஜன.9: பாரம்பரியமிக்க செனட் இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்ற சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இக்கட்டடத்தை தொன்மை மாறாமல் தொடர்ந்து பாதுகப்பதற்காக, செனட் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. திருவாசகம் கூறினார்.
இந்திய - மொகலாயக் கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டிருக்கும் செனட் இல்லத்தின் கட்டுமானப் பணிகள் 1869-ல் தொடங்கப்பட்டு 1873-ல் ராபர்ட் ஃபெல்லோஸ் சிஷோம் என்ற கட்டட வல்லுநரால் முடிக்கப்பட்டது.
செங்கல், கருங்கற்களால் ஆன இந்த இல்லத்தின் நடுவில் பட்டமளிப்புக் கூடம் அமைந்துள்ளது. இக்கூடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் பிரம்மாண்ட கல் தூண்கள் தாங்கி நிற்கும் வில் வளைவு விதானத்துடன் செனட் இல்லம் எழில் மிகு தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
இல்லத்தின் புரூம் ஹால் தட்டோடுகளால் வேயப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் தாராளமாக உள்ளே வரும் வகையில், கூடத்தின் கீழ்ப் பகுதியில் ஒவ்வொரு பக்கத்திலும் ஏழு ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மேல் பகுதி மர வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 14 ஜன்னல்கள் மூன்று தொகுப்புகளாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஜன்னல்களுக்கு எழில் கூட்டும் வகையில் வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறச் சுவர்களில் "ஸ்கிராஃபிட்டோ' என்ற வண்ணச் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் பொதுமக்களுக்கான இருக்கைகளுடன் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் "கிரேட் ஹாலில்' ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வசதி உள்ளது.
இதன் கீழ் பகுதியில் நிலவரைக் கூடம் உள்ளது. இச்சிறப்புகளுடன் அழகிய கோபுரங்களையும் கொண்டதாக பேரவை இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தை தாங்கி நிற்கும் தூண்கள் இந்து தெய்வங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2004-ல் ரூ.50 லட்சத்திற்கு மேல் செலவு செய்யப்பட்டு பேரவை இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இக்கட்டடத்தை பராமரிக்கும் வகையில் இதை அருங்காட்சியகமாக மாற்ற சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் கூறியது:நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த செனட் இல்லம், பல்கலைக்கழக விழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. பாரம்பரியமிக்க இந்தக் கட்டடத்தைப் பாதுகாக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரினர். இதை ஏற்கும் வகையில் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு: இந்தக் கட்டடத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தைப் பராமரிக்கும் வகையில் காப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். மேலும், செனட் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகம், செனட் இல்லத்தின் வரலாறு தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத் துறையுடன் இணைந்து திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன என்றார் திருவாசகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


