அரசு ஆணை என்ன? ""அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் ஒற்றைச் சாளர முறையில் (அரசு ஒதுக்கீட்டில்) சேர்க்கை பெறும் மாணவர்களில், அவர்களது குடும்பத்தில் யாரும் பட்டதாரிகளே இல்லையென்றால் அந்த மாணவர்கள் தொழில்கல்வி படிப்பதை ஊக்குவிக்க சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் வரும் கல்வி ஆண்டு (2010-11) முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்'' என்று கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏப்ரல் 16, 2010 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.