தொகுதி - ஓர் அறிமுகம்!: உளுந்தூர்பேட்டை (பொது)

தொகுதி பெயர் : உளுந்தூர்பேட்டை தொகுதி எண் : 77 அறிமுகம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்டது உளுந்தூர்பேட்டை தொகுதி. ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில்
தொகுதி - ஓர் அறிமுகம்!: உளுந்தூர்பேட்டை (பொது)
Published on
Updated on
1 min read

தொகுதி பெயர் : உளுந்தூர்பேட்டை



தொகுதி எண்
: 77

அறிமுகம் :

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்டது உளுந்தூர்பேட்டை தொகுதி. ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் 1952-ல் உருவாக்கப்பட்ட பொதுத் தொகுதிகளில் இதுவும் ஒன்று. 1977-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பில் இந்த தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்று உளுந்தூர்பேட்டை தனித் தொகுதியானது. மற்றொன்று திருநாவலூர் பொது தொகுதி. தற்போது நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் உளுந்தூர்பேட்டை வட்டத்தை உள்ளடக்கிய பொது தொகுதியாக தேர்தலைச் சந்திக்கிறது. உளுந்தூர்பேட்டை வட்டத்தை மட்டுமே முழுமையாக உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதி என்ற பெருமை இத்தொகுதிக்கு மட்டுமே உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பேரூராட்சி : உளுந்தூர்பேட்டை - 18 வார்டுகள்

கிராம ஊராட்சிகள் : 121

உளுந்தூர்பேட்டை ஒன்றியம் (53): அதையூர், அலங்கிரி,

அங்கனூர், ஆசனூர், எ.அத்திப்பாக்கம், தாமல், எல்லைக்கிராமம், ஏமம், எறையூர், காட்டு எடையார், காட்டுநெமிலி, காட்டுச்செல்லூர், பு.கிள்ளனூர், கிளியூர், எ.கொளத்தூர், பு.கொணலவாடி, குணமங்கலம், கூத்தனூர், கூவாடு, ஏ.குமாரமங்கலம், குஞ்சரம், எம்.குண்ணத்தூர், எ.மழைவராயனூர், மூலசமுத்திரம், நத்தாமூர், நெடுமானூர், பு.மலையூர், நெய்வனை, நொணையவாடி, பாலி, பல்லவாடி, பரிந்தல், பெருங்குறுக்கை, பிடாகம், பின்னல்வாடி, புகைப்பட்டி, புல்லூர், புத்தமங்கலம், ஆர்.ஆர்.குப்பம், ஏ.சாத்தனூர், செம்மியன்மாதேவி, எஸ்.மலையனூர், சீதேவி, சிக்காடு, சீக்கம்பட்டு, சிறுப்பாக்கம், தானம், தேன்குணம்,

திருப்பெயர், வடகுறும்பூர், வடமாம்பாக்கம், வெள்ளையூர், வீரமங்கலம்.

திருநாவலூர் ஒன்றியம் (44) :

ஏ.குறும்பூர், ஆண்டிக்குழி, ஆத்தூர், ஆதனூர், ஆரிநத்தம், இருந்தை, ஈஸ்வரக்கண்டநல்லூர், உ.நெமிலி, ஒடப்பங்கும், ஒடையானந்தல், களமருதூர்,

களவனூர், காம்பட்டு, கிழக்குமருதூர், கூ.கள்ளக்குறிச்சி, கூவாடு, கொரட்டூர், சிறுலாப்பட்டு, செங்குறிச்சி, செம்மணங்கூர், செம்மனந்தல், செரத்தனூர், சேந்தநாடு, சேந்தமங்கலம், திருநாவலூர், சோமாசிப்பாளையம், டி.ஒரத்தூர், தேவியானந்தல், நகர், நன்னாவரம், நாச்சியார்ப்பேட்டை, பரிக்கல், பா.கிள்ளனூர், பாண்டூர், பாதூர், பு.மாம்பாக்கம், பெரும்பட்டு, பெரும்பாக்கம், மடப்பட்டு, மதியனூர், மேட்டத்தூர், மேப்புலியூர், வானம்பட்டு, வேலூர்.

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் (24) :

கீரிமேடு, ஆலங்குப்பம், ஆமூர், ஆணைவாரி, ஆனத்தூர், அரசூர், அரும்பட்டு, கிராமம், இருவேல்பட்டு, கண்ணாரம்பட்டு, காந்தலவாடி, கரடிப்பாக்கம், காரப்பட்டு, டி.குமாரமங்கலம், மேலமங்கலம், மேல்தணியாளம்பட்டு, பேரங்கியூர், பெரியசெவலை, பொய்யரசூர், சரவணப்பாக்கம், சேமங்கலம், செம்மார், சித்தானங்கூர், தென்மங்கலம்.

வாக்காளர்கள் :

ஆண்     பெண்       திருநங்கைகள் மொத்தம்

1,15,235   1,10,168            11                          2,25,414

வாக்குச்சாவடிகள் :

275

தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :

தனபால், கலால் உதவி ஆணையர் : 9626614886.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com