டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ., சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்வு

சென்னை, மே 16: பொறியியல் படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான இடங்கள் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  ÷இதன் காரணமாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்கும

Updated On :20 செப்டம்பர் 2012, 3:40 am

சென்னை, மே 16: பொறியியல் படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான இடங்கள் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 ÷இதன் காரணமாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 பாலிடெக்னிக் படித்தவர்களும், கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பி.எஸ்சி. முடித்தவர்களும் பொறியியல் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இந்த மாணவர் சேர்க்கையை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

 ÷நடப்புக் கல்வியாண்டில் (2011-12), பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க தொழில்நுட்ப கல்வி ஆணையர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

 இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:

 நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. மாணவர் சேர்க்கை திட்டத்தின் கீழ் இதுவரை பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. நடப்பு கல்வியாண்டு முதல் இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் கூறினர். கூடுதல் இடங்கள் காரணமாக, இம்முறை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்?

 நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் உள்ள தொழில்நுட்ப கல்வி ஆணையர் அலுவலகம் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 34 மையங்களில் விநியோகம் செய்யப்பட உள்ளன.

 விண்ணப்பக் கட்டணம் ரூ. 300. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 130.

 கல்வித் தகுதி: நேரடியாக இரண்டாம் ஆண்டு பி.இ. படிப்பில் சேர பொதுப் பிரிவினர், பாலிடெக்னிக் அல்லது பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண்ணும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.