திருப்பூர், மே 17: கடந்த 2001-2006 அதிமுக ஆட்சியில் இருந்தது போல் இந்திய அளவில் தமிழகம் தொழில் துறை வளர்ச்சியில் முதலிடம் பெறும். அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் சி.சண்முகவேலு தெரிவித்துள்ளார்.
கடுமையான மின்தடை, மூலப்பொருட்கள் விலையேற்றம், திறன் மிக்க தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தமிழகம் முழுவதும் அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இச் சூழ்நிலையில் தமிழக தொழில்துறை
அமைச்சராக சி.சண்முகவேலு பொறுப்பேற்றுள்ளார். தொழில் துறை வளர்ச்சிக்கு அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து "தினமணி' செய்தியாளருக்கு தொலைபேசியில் அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
கடந்த 2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் பல்வேறு நிலைகளில் அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், மீண்டும் தமிழக தொழில்துறையை சீரமைத்து மேம்படுத்த வேண்டிய கடமை புதியதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அதனடிப்படையில், இந்திய அளவில் தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் மீண்டும் முதலிடம் பெறும்.
மின் பற்றாக்குறை:முதல்வர் ஆலோசனை முதற்கட்டமாக மின்சார பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். மின்தட்டுóப்பாடு பிரச்னை தீர்வு பெறும்போது அனைத்துத் தொழில்துறையும் பெரும் வளர்ச்சி பெறும்.
தவிர, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நிலவும் சாயக்கழிவுநீர் பிரச்னை குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப் பிரச்னை குறித்து விரிவாக ஆராய்ந்து சரியான திட்டத்துடன் நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், எந்தெந்த வழிகளில் தமிழக தொழில் துறையை மேம்படுத்த முடியுமோ அந்தந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும் என்றார் அமைச்சர் சண்முகவேலு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


